Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'போதை இளைஞர்களை மீட்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்'

'போதை இளைஞர்களை மீட்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்'

'போதை இளைஞர்களை மீட்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்'

'போதை இளைஞர்களை மீட்டால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்'

ADDED : மே 24, 2025 11:34 PM


Google News
Latest Tamil News
மது அருந்துவதில், இளைஞர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இவர்களை மீட்கவில்லை என்றால், நாட்டின் எதிர்காலம் இருண்ட காலமாகவே மாறிவிடும் என்று எச்சரிக்கிறார், கவிஞர் பொன்சிங்.

கோவை ராமநாதபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிக்கிறார் இவர். பாரத ஸ்டேட் வங்கியில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எழுத்தின் மீது அலாதி பிரியம். கதை, கவிதை, நாவல் என, ஆறு நுால்களை எழுதி இருக்கிறார்.

இவரது நாவலுக்காக பாரத ஸ்டேட் வங்கி விருது, கவிதை நுாலுக்காக குறிஞ்சி இலக்கிய மன்ற விருது, சமூக சேவைக்காக திரு.வி.க., விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

அவரிடம் பேசினோம்...

''கோவை வேளாண் பல்கலையில் இளங்கலை படித்தேன். முதலில், 'உன்னதங்களின் ஓசை' என்ற ஆன்மிக பாடல் தொகுப்பு நுாலை வெளியிட்டேன். பத்திரிகைகளில் என் கவிதைகள் நிறைய வெளிவந்துள்ளன. அவைகளை தொகுத்து இரண்டு கவிதை நுால்களாக வெளியிட்டு இருக்கிறேன். 'உறவும் பிரிவும்' என்ற நாவலை எழுதியிருக்கிறேன்.

அந்த நாவல், மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் பற்றியது. மது பழக்கம், தமிழகத்தில் விமோசனமற்ற சாபமாகவும், தீரா துயரமாகவும் இருந்து வருகிறது. இதில் இருந்து இளைஞர்களை மீட்டால், நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்,''.

''தவறினால், அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலமும் இருண்ட காலமாகவே மாறிவிடும். மதுவில் இருந்து மீள்வதற்கான வழிகளை இந்த நாவலில் எழுதியிருக்கிறேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us