/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குட்டையில் முதலை மாயம்; வனத்துறையினர் அதிர்ச்சிகுட்டையில் முதலை மாயம்; வனத்துறையினர் அதிர்ச்சி
குட்டையில் முதலை மாயம்; வனத்துறையினர் அதிர்ச்சி
குட்டையில் முதலை மாயம்; வனத்துறையினர் அதிர்ச்சி
குட்டையில் முதலை மாயம்; வனத்துறையினர் அதிர்ச்சி
ADDED : ஜன 07, 2024 09:09 PM
மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே தென்னம்பாளையத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதலை ஒன்று விவசாய கிணற்றில் தென்பட்டது. சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனப்பணியாளர்கள் முதலையை பிடிக்க முயன்ற போது, அது அருகில் உள்ள குட்டைக்கு சென்றுவிட்டது. குட்டைக்கு சென்ற முதலை அதன் பின் தென்படவில்லை. குட்டையில் நெட் அமைத்து சுமார் 1 மாதம் வரை வனத்துறையினர் முதலை உள்ளதா என கண்காணித்து வந்தனர். முதலை கிடைக்கவில்லை.
இந்நிலையில், காரமடை சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மோத்தேபாளையத்தில் குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் உள்ளதாக, சிறுமுகை வனத்துறையினருக்கு ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் முதலை இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின் முதலையை கண்காணித்து வந்த வனத்துறையினர், கடந்த நான்கு நாட்களாக முதலையை பிடிக்கும் பணியை மேற்கொண்டனர். குட்டையில் உள்ள தண்ணீர் முழுவதுமாக எடுக்கப்பட்டு, நெட் அமைத்து முதலையை தேடினர். ஆனால் முதலை கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ''மோத்தேபாளையம், தென்னம்பாளையம் குட்டைகளில் உள்ள தண்ணீர் மெல்ல மெல்ல வெளியேற்றப்பட்டு, நெட் அமைத்து முதலையை பிடிக்கும் பணியை மேற்கொண்டோம்.
ஆனால் முதலைகிடைக்கவில்லை. குட்டைகளில் முதலை இல்லை. அவை வெளியேறிவிட்டன. எனினும் அருகில் உள்ள கிணறுகள், குட்டைகளில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்'' என்றார்.----