/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதற்குள் வெள்ளாமையே முடிஞ்சுடும்! வனத்துறை எந்த விபரமும் தெரிவிப்பதில்லை என புகார்காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதற்குள் வெள்ளாமையே முடிஞ்சுடும்! வனத்துறை எந்த விபரமும் தெரிவிப்பதில்லை என புகார்
காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதற்குள் வெள்ளாமையே முடிஞ்சுடும்! வனத்துறை எந்த விபரமும் தெரிவிப்பதில்லை என புகார்
காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதற்குள் வெள்ளாமையே முடிஞ்சுடும்! வனத்துறை எந்த விபரமும் தெரிவிப்பதில்லை என புகார்
காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுப்பதற்குள் வெள்ளாமையே முடிஞ்சுடும்! வனத்துறை எந்த விபரமும் தெரிவிப்பதில்லை என புகார்

கழிவு குவிப்பு
பி.ஏ.பி., கால்வாயில் கழிவுகள் கொட்டாமல் இருக்க, ஜமீன் கோட்டாம்பட்டி கால்வாய் அருகே பென்சிங் அமைக்கப்பட்டது. ஆனால், பென்சிங்கையொட்டி குப்பை கொட்டப்படுகின்றன. அங்கலகுறிச்சி, ஜமீன் ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளிலும் குப்பை கொட்டுகின்றனர்.
தண்ணீர் பாதிப்பு
கோட்டூரில் விவசாய பூமி அருகே உள்ள, தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து வரும் மஞ்சி கழிவுநீர், கிணற்று நீரிலும், கால்வாயிலும் கலக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தில் நோயால் ஜாதிக்காய் பாதிக்கப்படுகிறது; நோய் குறித்து ஆய்வு செய்து அதை கட்டுப்படுத்த வழிவகைகளை தெரிவிக்க வேண்டும். தென்னையில் வெள்ளை ஈ பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதிகாரிகள், மத்திய, மாநில அரசுக்கு இதன் தீவிரத்தை எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர் திருட்டு
பி.ஏ.பி., கால்வாயில் நீர் திருட்டை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், நீர்வளத்துறை அதிகாரிகளுடன், போலீசார், வருவாய்துறை அதிகாரிகளும் இணைந்து செல்ல வேண்டும். காட்டம்பட்டி, அரசூர் கால்வாய்கள் அருகே உள்ள பைப்லைன்களை அகற்ற வேண்டும்.
புகார் கொடுங்க!
சப் - கலெக்டர் (பொ) பேசுகையில், ''விவசாயிகள் தெரிவித்த பிரச்னைகளுக்கு, பதில்களை அளிக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் கட்டுப்படுத்துவதற்கான குழு அமைத்து இருந்தால், அதன் தகவல்களை தெரிவிப்பதோடு, விவசாயிகள் கூட்டம் நடப்பதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கால்வாய்களில் கழிவுகளை கொட்டுவோர் மீது ஊராட்சி நிர்வாகங்கள், போலீசில் புகார் கொடுக்க வேண்டும்,'' என்றார்.