/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/2024ல் பெய்த முதல் மழை 'குளுகுளு' கோவையானது!2024ல் பெய்த முதல் மழை 'குளுகுளு' கோவையானது!
2024ல் பெய்த முதல் மழை 'குளுகுளு' கோவையானது!
2024ல் பெய்த முதல் மழை 'குளுகுளு' கோவையானது!
2024ல் பெய்த முதல் மழை 'குளுகுளு' கோவையானது!
ADDED : ஜன 06, 2024 12:51 AM
கோவை;கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு சாரல் மழை பெய்தது. மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மேற்கு பகுதிகளிலும், வடக்கு பகுதியிலும் மழை பதிவானது.
கோவை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணி முதல் சாரல் மழை பெய்தது. அதே நேரம், தொண்டாமுத்துார், சிறுவாணி அடிவாரம் உள்ளிட்ட தெற்கு பகுதிகளிலும், மேட்டுப்பாளையம், அன்னுார், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட வடக்கு பகுதியிலும் மழைப்பொழிவு காணப்பட்டது.
மழையோடு குளிர் காற்றும் வீசியதால், குளுகுளு சீதோஷ்ண நிலை இருந்தது. எதிரே வருவோரை பார்க்க முடியாத அளவுக்கு, நேற்று காலை அடர் பனி படர்ந்திருந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை அளவு:
அன்னுார் - 12.40 மி.மீ., மேட்டுப்பாளையம் - 21.50, பீளமேடு - 10, வேளாண் பல்கலை - 26, பெரியநாயக்கன் பாளையம் - 26.40, பில்லுார் அணை - 19, தொண்டாமுத்துார் - 20, சிறுவாணி அடிவாரம் - 26 மி.மீ., மழை பதிவானது.
2024ம் ஆண்டு துவங்கியதில், முதல் மழை நேற்று முன்தினம் பதிவாகியிருக்கிறது; இம்மழையால், மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது.
நாளை (7ம் தேதி) முதல், 9ம் தேதி வரை மீண்டும் மழை எதிர்பார்க்கலாம் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.