/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!
யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!
யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!
யானை தும்பிக்கையை வருடலாம் டைனோசரை விரட்டியடிக்கலாம்!
ADDED : ஜன 06, 2024 09:02 PM
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், ரூ.2.98 கோடியில் உக்கடம் பெரிய குளத்தின் மேற்கு கரையில், 'எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்' அமைக்கப்பட்டிருக்கிறது.
உள்ளே நுழைந்தால், '3டி' கண்ணாடி வழங்குகின்றனர். அதை அணிந்ததும், ஏர்கண்டிஷன் அறைக்குள் அழைத்துச் செல்கின்றனர். சற்று நேரத்தில் திரையில் '3டி' படம் விரிகிறது.
சிறுவாணி அடிவாரத்தில், கோவை குற்றாலம் நீர் வீழ்ச்சியில் நாம் நடந்து செல்வது போலவும், அங்கு தேங்கியுள்ள தண்ணீரை தொட்டுப் பார்க்கும் அளவுக்கு, அருகில் இருப்பது போலவும், காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.
மங்கி பால்ஸ், வைதேகி நீர்வீழ்ச்சி, மருதமலை முருகன் கோவில், டவுன்ஹால் கோனியம்மன் கோவில் என ஒவ்வொரு இடமாக, நம்மை அழைத்துச் செல்கிறது.
ஒவ்வொன்றாக பார்த்து மனதை பறிகொடுத்த ஆச்சரியம் தீர்வதற்குள், ஆனைமலை புலிகள் காப்பக யானையின் தும்பிக்கையை, வருடிக் கொடுத்துக் கொண்டிருப்போம். அத்தனையும் 3டி தொழில்நுட்பம்!
வரலாறு அறியலாம்
ஆச்சரியத்தோடு சற்று நகர்ந்து... பக்கத்துக்கு அறைக்குள் சென்றால்... வரிசையாக தொடு திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில், கோவையை சுற்றியுள்ள நீர் நிலைகளை பற்றிய அரிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
சிறுவாணியை பற்றி அறிய விரும்பி, அதை 'டச்' செய்தால்... அதன் வரலாறு திரையில் வருகிறது. நொய்யல் ஆற்றை பற்றி அறிய விரும்பினால்... அதுவும் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வரலாறை அறிந்து கொண்டு, கடைசி திரைக்கு சென்றால்... உங்கள் அறிவுக்கு சவால் விடுக்கும் வகையில் , நான்கு பதில் கொடுத்து, சரியான பதில் கேட்டு, வினா கேட்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, சிறுவாணி அணையை உருவாக்கியவர் யார் என கேட்டு, நான்கு பதில்கள் கொடுக்கப்படுகின்றன. முந்தைய ஸ்கிரீனில் நாம் அதை படித்திருந்தால், இங்கு சரியான பதிலை சொல்ல முடியும்.
தவறான பதிலை குறிப்பிட்டாலும், சரியான பதில் சொல்லப்படுகிறது. இந்த அறையில், நீர் நிலைகள் குறித்த நமது பொது அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இம்மையத்துக்கு சென்று வந்தால், பிரமிப்பு மட்டுமின்றி, மனதை வருடும் அனுபவமும் கிடைக்கும்!