/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' 'போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்'
'போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்'
'போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்'
'போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்'
ADDED : ஜூன் 25, 2025 11:01 PM

கோவை; அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவு தினத்தை முன்னிட்டு, பீளமேட்டில் உள்ள மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில், புகைப்பட கண்காட்சி நடந்தது.
எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டடனர். அக்காலகட்டத்தில், சிறை சென்று, தற்போது பா.ஜ., பொருளாளராக உள்ள, எஸ்.ஆர்.சேகருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது.
பின், நிருபர்களிடம் வானதி கூறியதாவது:
தமிழகத்தில், இன்று சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மக்களின் மீது அதிக வரிச்சுமை திணிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்ட பிறகே, தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டது. தனது அரசின் தோல்விகளை மறைக்கவே, மத்திய அரசை தி.மு.க., குறை கூறுகிறது.
மத்திய அரசு, அனைவரும் ஒரே மாதிரியான கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்புகிறது. பள்ளிகளில், தமிழை அதிகமாக கற்றுக் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை, தி.மு.க., அரசு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரத்தை, முற்றிலும் ஒழிக்க வேண்டும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வலுவடைந்து வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை, தி.மு.க., எம்.பி., ராஜா தரக்குறைவாக விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு, அவர் கூறினார்.