/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உயிரிழந்தது 'சாரா': போலீசார் அஞ்சலி உயிரிழந்தது 'சாரா': போலீசார் அஞ்சலி
உயிரிழந்தது 'சாரா': போலீசார் அஞ்சலி
உயிரிழந்தது 'சாரா': போலீசார் அஞ்சலி
உயிரிழந்தது 'சாரா': போலீசார் அஞ்சலி
ADDED : செப் 15, 2025 12:24 AM

கோவை; கோவை காவல்துறையில், 10 ஆண்டுகள் பணிபுரிந்து உயிரிழந்த மோப்பநாய்க்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.
கோவை மாநகர போலீஸ் மோப்பநாய் பிரிவில் மொத்தம், 14 நாய்கள் உள்ளன. 2016ம் ஆண்டு லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தை சேர்ந்த பெண் நாய் சாரா பணியில் சேர்ந்தது. டிராக்கர் பணியை மேற்கொண்டு வந்த சாரா, பணிகாலத்தில், 103 அழைப்புகளின் அடிப்படையில் பணியை மேற்கொண்டது. 2024ம் ஆண்டு ஓய்வு பெற்றது.
சிறுநீரக குறைபாடு ஏற்பட்டு உடல்நலம் குன்றியது. சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தது.
போலீசார், உயிரிழந்த மோப்பநாய்க்கு அஞ்சலி செலுத்தினர். போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.