/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'ஏறு தழுவுதல் மைதானத்திற்கு கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது''ஏறு தழுவுதல் மைதானத்திற்கு கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது'
'ஏறு தழுவுதல் மைதானத்திற்கு கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது'
'ஏறு தழுவுதல் மைதானத்திற்கு கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது'
'ஏறு தழுவுதல் மைதானத்திற்கு கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது'
ADDED : ஜன 29, 2024 12:30 AM

போத்தனூர்;கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மோடி ரேக்ளா பந்தயம் நேற்று நடந்தது.
வெள்ளலூர் அடுத்து கள்ளப்பாளையம் பிரிவில் காலை, 7:00 மணிக்கு பந்தயம் துவங்கியது. 200 மற்றும், 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடந்த பந்தயத்தில், 210 வண்டிகள் பங்கேற்றன.
200 மீட்டர் பிரிவில், கோபினாத், வசந்தகுமாரின் காளைகள் முதலிடத்தை பிடித்தன. கதிர், காளிமுத்து மற்றும் செந்தூர் முருகன், ராமமூர்த்தி ஆகியோரது வண்டிகள் முறையே இரண்டு, மூன்றாம் இடங்களை பிடித்தன.
300 மீட்டர் பிரிவில் சதீஷ்குமாரின் வண்டி முதலிடத்தை பிடித்தது. கதிர்வேல், அற்புதா மற்றும் சதீஷ்குமார், ராஜா ஆகியோரது வண்டிகள் முறையே இரண்டு, மூன்றாமிடங்களை பிடித்தன.
200 மீட்டரில் முதலிடம் பிடித்தவர்களுக்கு கார், 300 மீட்டரில் முதலிடம் பிடித்தவர்களுக்கு புல்லட் ஆகியவை, கோவை கிருஷ்ணா கல்வி குழுமம் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. தங்கம், வெள்ளி நாணய பரிசுகளை, கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் வசந்தராஜன் வழங்கினார்.
பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கி பேசுகையில், ''ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல், ரேக்ளா ஆகியவை நடக்க, பிரதமர் மோடிதான் காரணம்.
இவை தடை செய்யப்பட காரணமாக இருந்த, தி.மு.க., தலைவர் மறைந்த கருணாநிதி பெயரை, ஏறு தழுவுதல் மைதானத்திற்கு வைக்கக் கூடாது,'' என்றார்.
முன்னதாக, அண்ணாமலை முன்னிலையில், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மண்டல இளைஞரணியின் பெரியசாமி, தீரர் தொழிற்சங்க பேரவை மாநில பொது செயலாளர் கார்த்திகேயன், காவுத்தம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பவித்ரா உட்பட, நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர்.