/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மத்திய அரசிடம் நிதி பெறும் திறமை முதல்வருக்கு இல்லை! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டுமத்திய அரசிடம் நிதி பெறும் திறமை முதல்வருக்கு இல்லை! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
மத்திய அரசிடம் நிதி பெறும் திறமை முதல்வருக்கு இல்லை! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
மத்திய அரசிடம் நிதி பெறும் திறமை முதல்வருக்கு இல்லை! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
மத்திய அரசிடம் நிதி பெறும் திறமை முதல்வருக்கு இல்லை! எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு
ADDED : பிப் 25, 2024 01:40 AM

பொள்ளாச்சி,;''மத்திய அரசிடம் நிதி பெறும் திறமை, முதல்வர் ஸ்டாலினிடம் இல்லை,'' என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சியில், அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா உருவ படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் தலைமை வகித்த எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். காரணம், விவசாயிகள், சிறு, குறு, பெரிய தொழிலதிபர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் என அனைத்து தரப்பினரும், ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு எதிர்ப்பாக உள்ளனர்.
மக்களுக்காக எதுவும் செய்யாமல், வார்த்தை ஜாலத்தால் மட்டும் இந்த ஆட்சி காலத்தை கடத்துகிறது. தற்போது மக்கள் விழித்துக்கொண்டனர். விரைவில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும். மக்களுக்கு சுபிட்சமாக மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
மத்திய அரசு நிதி கொடுப்பதில் பாரபட்சம் காட்டுகிறது என்பது நீண்ட காலமாக சொல்லக்கூடிய ஒன்றுதான். மத்திய அரசிடம் பேசி அந்த நிதியை பெறக்கூடிய திறமை முதல்வர் ஸ்டாலினிடம் இல்லை.
மற்றவர் மீது குறை சொல்வதில் அர்த்தமில்லை. மத்திய அரசிடம் பேசி நிதி பெற்று மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.