/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்பந்து போட்டியில் நடுமலை அணி வெற்றி கால்பந்து போட்டியில் நடுமலை அணி வெற்றி
கால்பந்து போட்டியில் நடுமலை அணி வெற்றி
கால்பந்து போட்டியில் நடுமலை அணி வெற்றி
கால்பந்து போட்டியில் நடுமலை அணி வெற்றி
ADDED : மே 21, 2025 11:16 PM

வால்பாறை, ; வால்பாறை தாலுகா அளவிலான கால்பந்து போட்டியில், நடுமலை எஸ்டேட் அணி வெற்றி பெற்றது.
வால்பாறை நகரில், உட்பிரியார் எஸ்டேட் சார்பில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தாலுகா அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. நல்லகாத்து விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டியில், பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த, 16 அணி வீரர்கள் விளையாடினர்.
இறுதி போட்டியில், வறட்டுப்பாறை எஸ்டேட் அணியும், நடுமலை எஸ்டேட் அணியும் மோதின. இரு அணிகளும் தலா ஒரு 'கோல்' அடித்த நிலையில், 'டைபிரேக்' முறையில் நடுமலை எஸ்டேட் அணி வீரர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு, உட்பிரியார் எஸ்டேட் பொதுமேலாளர் ரஞ்சித் பரிசு வழங்கி பாராட்டினார்.