/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காரை தடுத்து நிறுத்தி பணம், நகை பறிப்புகாரை தடுத்து நிறுத்தி பணம், நகை பறிப்பு
காரை தடுத்து நிறுத்தி பணம், நகை பறிப்பு
காரை தடுத்து நிறுத்தி பணம், நகை பறிப்பு
காரை தடுத்து நிறுத்தி பணம், நகை பறிப்பு
ADDED : ஜன 04, 2024 10:43 PM
பாலக்காடு:பாலக்காடு நகரில், காரை மறித்து பணம் மற்றும் நகையை பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் எர்ணாகுளத்தை சேர்ந்தவர், தன்னுடன் வேலை பார்க்கும் நபரை, காரில் நேற்று அதிகாலை அவரது வீட்டில் விட்டு திரும்பினார். ரோபின்சன் ரோட்டில், திடீரென இருவர் காரை வழி மறித்து நிறுத்தி, 24 ஆயிரம் ரூபாய் பணம், கழுத்தில் அணிந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர்.
இது குறித்து, பாலக்காடு டவுன் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பணம், நகை பறிப்பில் ஈடுபட்டது, பள்ளிப்புரத்தை சேர்ந்த உம்மர் நிஹால், 19, மேழ்சி கல்லுாரி பகுதியை சேர்ந்த ரினீஷ், 20, என்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, இவர்கள் பதுங்கி இருந்த இடத்துக்குச் சென்ற இன்ஸ்பெக்டர் ஷிஜு ஆபிரகாம் தலைமையிலான போலீசார், அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.