Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நுால் வெளியீட்டு விழா சூலுாரில் நடந்தது

நுால் வெளியீட்டு விழா சூலுாரில் நடந்தது

நுால் வெளியீட்டு விழா சூலுாரில் நடந்தது

நுால் வெளியீட்டு விழா சூலுாரில் நடந்தது

ADDED : மே 27, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
சூலுார், : கொங்கு மண்டல நாட்டுப்புற வழக்காற்று பழமொழிகளும், ஒப்பாரி பாடல்களும்,' என்ற நூல் வெளியீட்டு விழா சூலுாரில் நடந்தது.

சூலுாரை சேர்ந்தவர் புலவர் ஆறுச்சாமி. 32 ஆண்டுகள் பட்டதாரி தமிழாசியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கொங்கு மண்டல நாட்டுப்புற வழக்காற்று பழமொழிகளும், ஒப்பாரி பாடல்களும் எனும் நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சூலுாரில் நடந்தது. தமிழ்நாடு இலக்கிய பேரவையின் தலைவர் கவிஞர் பொன்முடி சுப்பையன் தலைமை வகித்தார்.

தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம், நூலை வெளியிட, மருத்துவர்கள் சுப்பிரமணியம், பாலச்சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நூலாசிரியர் ஆறுச்சாமி பேசுகையில், இந்த நூலை எழுத, பல சான்றோர்கள் வழிகாட்டினர். நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பழமொழிகளும், ஒப்பாரி பாடல்களும் ஆழமான பொருளை கொண்டவை. அவற்றை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், என்றார்.

முன்னாள் மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, பேராசிரியர் ரவிக்குமார், முன்னாள் தலைமையாசிரியை திலகவதி, தமிழ் சங்க தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us