Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'ஆப்பரேஷன் சிந்துார்' வீரர்களுக்கு இன்று நன்றி நவிழும் விழா

'ஆப்பரேஷன் சிந்துார்' வீரர்களுக்கு இன்று நன்றி நவிழும் விழா

'ஆப்பரேஷன் சிந்துார்' வீரர்களுக்கு இன்று நன்றி நவிழும் விழா

'ஆப்பரேஷன் சிந்துார்' வீரர்களுக்கு இன்று நன்றி நவிழும் விழா

ADDED : மே 24, 2025 11:36 PM


Google News
கோவை: 'ஆப்பரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் ஈடுபட்ட படைவீரர்களுக்கு, படைப்பாளர்கள் சார்பில், நன்றி நவிழும் விழா, கோவையில் இன்று நடக்கிறது.

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் கடந்த மாதம் சுற்றுலா பயணியர், 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, நமது நாட்டின் பாதுகாப்பு படையினர் 'ஆப்பரேஷன் சிந்தூர்' எனும் பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தனர். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்நடவடிக்கையில் ஈடுபட்ட வீரர்களுக்கு, நாடே நன்றி தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், 'கோவையில் படைப்பாளர்கள் சங்கமம்' எனும் பாராட்டு நிகழ்ச்சி இன்று நடக்கிறது. ராம்நகர், ராமர் கோவில் வீதியிலுள்ள வாணிஸ்ரீ அரங்கில் மாலை, 3:30 மணிக்கு தேசபக்தி பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.

இதில், 'வெற்றித்திலகம்' எனும் குறும்படம் வெளியீடு, படைப்பாளர்கள் கலந்துரையாடல், 'எல்லைச் சாமிகளுக்கு நன்றி படையல்' எனும் கவியரங்கம், 'படைவீரர்களும் படைப்பாளர்களும்' எனும் கருத்தரங்கம் ஆகியவை நடக்கின்றன.

டாக்டர் பாலகுருசாமி, கவிஞர்கள் சிதம்பரநாதன், மரபின் மைந்தன் முத்தையா, அரங்க. சுப்ரமணியம், தொழிலதிபர் சுப்ரமணியம், பேராசிரியர் கனகசபாபதி, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us