/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழாசென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா
சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா
சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா
சென்னியாண்டவர் கோவிலில் தைப்பூச தரிசன விழா
ADDED : ஜன 28, 2024 11:29 PM

கருமத்தம்பட்டி:சென்னியாண்டவர் கோவில் தைப்பூச தரிசன விழாவை ஒட்டி, பக்தர்கள் பால் குடம் எடுத்தும், காவடி ஆடியும் வந்து தரிசனம் செய்தனர்.
கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவிலில், கடந்த, 25ம் தேதி தைப்பூச திருக்கல்யாணமும், 26ம்தேதி மாலை தேரோட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பரிவேட்டை உற்சவமும் நடந்தது. நேற்று காலை மகா தரிசன பூஜை நடந்தது.
தரிசன விழாவை ஒட்டி, வாகராயம்பாளையம், கருமத்தம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சங்கமம் நாட்டுப்புற கலைக்குழுவின் ஒயிலாட்ட குழுவினர், ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில், பால் மற்றும் பன்னீர் குடம் எடுத்து வந்தனர்.
காவடி ஆட்டத்துடன் வாகராயம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து கிட்டாம்பாளையம், கருமத்தம்பட்டி வழியாக சென்னியாண்டவர் கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்தனர். இரு இடங்களிலும் காவடியாட்டம் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.