ADDED : ஜன 31, 2024 12:06 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி கோவிலில், தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், சிம்ம வாகன வாராஹி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு, தேய்பிறை பஞ்சமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம்.
அவ்வகையில், நேற்று தேய்பிறை பஞ்சமியையொட்டி, வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து திரளான பெண்கள், பொதுமக்கள், பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
அதே போல், பொள்ளாச்சியை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களிலும், வாராஹி அம்மனுக்கு, தேய்பிறை பஞ்சமியையொட்டி, சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது.