Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒழுக்க நெறிகளை மீறும் பள்ளி மாணவர்கள் கண்டிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்

ஒழுக்க நெறிகளை மீறும் பள்ளி மாணவர்கள் கண்டிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்

ஒழுக்க நெறிகளை மீறும் பள்ளி மாணவர்கள் கண்டிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்

ஒழுக்க நெறிகளை மீறும் பள்ளி மாணவர்கள் கண்டிக்க முடியாமல் திணறும் ஆசிரியர்கள்

ADDED : ஜூன் 06, 2025 11:05 PM


Google News
பொள்ளாச்சி; அரசுப்பள்ளிகளில், ஒழுக்க நெறிமுறைகளை மீறும் மாணவர்களை கண்டிக்கும்போது, பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகள் என மொத்தம், 90க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.

அதில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 29 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர்.

இம்மாணவர்கள், பள்ளிக்கு வரும் போது, குறிப்பிட்ட ஒழுக்க விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

மாணவர்கள் அனைவரும் காலை, 9:15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும். 'லோ ஹிப்', 'டைட் பிட்' 'பேன்ட்'கள் அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது.

மாணவர்கள் அணியும் சட்டை நீளம் 'டக் இன்' செய்யும் போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும். சீரற்ற முறையில் 'இன்' பண்ணக்கூடாது. கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட வேண்டும்.

மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை, கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாணவர்கள் சிலர், இத்தகைய ஒழுக்க விதிககளை கடைபிடிப்பதில்லை.

வகுப்பு ஆசிரியர்கள் கண்டிக்க முற்பட்டாலும், கீழ் படிவதில்லை. நீளமாக தாடி மற்றும் தலை முடி வளர்த்தியும், முறையாக சீருடை அணியாமலும் அவ்வப்போது அடாவடிகளில் ஈடுபடுகின்றனர்.

பெற்றோர்களை அழைத்து தகவல் தெரிவித்தால், அவர்கள் ஆசிரியர்களுக்கு ஒத்துழைப்பு அவசியம் தர வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களை திருத்த, கடும் நடவடிக்கை தேவைப்படுகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us