/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அனைத்து நாட்களிலும் நகராட்சிக்கு வரி செலுத்தலாம்அனைத்து நாட்களிலும் நகராட்சிக்கு வரி செலுத்தலாம்
அனைத்து நாட்களிலும் நகராட்சிக்கு வரி செலுத்தலாம்
அனைத்து நாட்களிலும் நகராட்சிக்கு வரி செலுத்தலாம்
அனைத்து நாட்களிலும் நகராட்சிக்கு வரி செலுத்தலாம்
ADDED : பிப் 23, 2024 10:59 PM
பொள்ளாச்சி:'பொள்ளாச்சி நகராட்சியில் அனைத்து நாட்களிலும் வரி செலுத்தலாம்,' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் சுப்பையா அறிக்கை:
பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிம கட்டணம் மற்றும் நகராட்சி கடை வாடகை ஆகிய வருவாய் இனங்கள் உள்ளன. இந்த வருவாய் இனங்களில், நிலுவை வைத்துள்ள வரிகள் வரும், 29ம் தேதிக்கு முன்பாக நகராட்சி அலுவலகம் மற்றும் பாலகோபாலபுரம் வீதி வரி வசூல் மையங்களில், வரியை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
'ஆன்லைன்' வாயிலாகவும், (https://tnurbanepay.tn.gov.in) அல்லது TNURBAN ESEVAI (மொபைல் செயலி வாயிலாக) செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை மற்றும் இதர சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தவிர்த்து நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் வசதிக்காக வரி வசூல் மையங்கள், அனைத்து நாட்களிலும் காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.