/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'தமிழ் எங்கள் உயிர்மெய்' அசத்திய போட்டியாளர்கள்'தமிழ் எங்கள் உயிர்மெய்' அசத்திய போட்டியாளர்கள்
'தமிழ் எங்கள் உயிர்மெய்' அசத்திய போட்டியாளர்கள்
'தமிழ் எங்கள் உயிர்மெய்' அசத்திய போட்டியாளர்கள்
'தமிழ் எங்கள் உயிர்மெய்' அசத்திய போட்டியாளர்கள்
ADDED : பிப் 12, 2024 01:15 AM

கோவை;ஸ்ரீசங்கரா டி.வி., சார்பில், 'தமிழ் எங்கள் உயிர்மெய்' என்ற, பேச்சுப்போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இப்போட்டியின் இறுதி சுற்று நிகழ்ச்சி, கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் நேற்று மாலை நடந்தது.
இதில் ஒன்பது போட்டியாளர்கள் பங்கேற்று, தங்களின் பேச்சு திறமையை வெளிப்படுத்தினர். பேராசிரியர்கள் சிவகாசி ராமச்சந்திரன், பர்வீன் சுல்தானா, ராமகிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
இதில் பேராசிரியர் ராமச்சந்திரன் பேசியதாவது:
இன்றைக்கு இளைஞர்களுக்கு, நமது பாரம்பரிய கலைகளில் நாட்டம் இல்லை. அவர்களின் நவீன வாழ்க்கை முறை, வேறு எங்கோ போய் கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஸ்ரீசங்கரா டி.வி., 'தமிழ் எங்கள் உயிர்மெய்' என்ற ஒரு பேச்சு போட்டியை நடத்தி, இளம் பேச்சாளர்களை உருவாக்கி உள்ளது. இறுதி சுற்று நிகழ்ச்சிக்கு, தமிழ் பாரம்பரிய கலைகளின் பெயர்களை தலைப்பாக கொடுத்து பேச வைத்து இருப்பது மிகவும் சிறப்பு.
இவ்வாறு, அவர் பேசினார்.