/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேலோ இந்தியா போட்டி: தமிழக அணி தேர்வுகேலோ இந்தியா போட்டி: தமிழக அணி தேர்வு
கேலோ இந்தியா போட்டி: தமிழக அணி தேர்வு
கேலோ இந்தியா போட்டி: தமிழக அணி தேர்வு
கேலோ இந்தியா போட்டி: தமிழக அணி தேர்வு
ADDED : ஜன 08, 2024 01:36 AM

கோவை;தமிழகத்தில் நடக்கவுள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டின், கட்கா மற்றும் 'தங்டா' போட்டிக்கான தமிழக அணி தேர்வு, கற்பகம் பல்கலை வளாகத்தில் நடந்தது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான வீரர் வீராங்கனை தேர்வு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதன், தமிழக அணிக்கான கட்கா மற்றும் தங்டா போட்டிகளுக்கான தேர்வு, ஈச்சனாரி கற்பகம் பல்கலை வளாகத்தில் கடந்த 6ம் தேதி நடந்தது.
போட்டியை, கற்பகம் பல்கலை துணைவேந்தர் வெங்கடாஜலபதி துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் அருணா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், கற்பகம் பல்கலை உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இத்தேர்வில் 200க்கும் மேற்பட்டோர், பல்வேறு எடைப்பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் 'தங்டா' போட்டியில் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள், கட்கா போட்டியில் ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள், தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.