/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழா
ADDED : ஜன 12, 2024 10:46 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சுவாமி விவேகானந்தரின், 161வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி ஜோதிநகர் சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம் சார்பில், சுவாமி விவேகானந்தரின், 161வது பிறந்தநாள் விழா, மினர்வா பள்ளியில் நடந்தது. மன்ற தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ரகுபதி வரவேற்றார்.
விழாவை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு கோப்பைகளை, திருக்கோவில் தீபங்கள் அறக்கட்டளை தலைவர் சங்கரவடிவேலு வழங்கினார்.
எழுத்து பயிற்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, நகராட்சி துணை தலைவர் கவுதமன், வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் பரிசு வழங்கினர். விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பள்ளியின் தாளாளர் சுகந்தி, சேவாலயம் நிறுவனர் ஞானசேகன், ஆகியோர் பரிசு வழங்கினர்.
சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்ற இணை செயலாளர் முருகன் நன்றி கூறினார். மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* என்.ஜி.எம்., கல்லுாரியின் சுவாமி விவேகானந்தர் சிந்தனை மன்றத்தின் சார்பில், இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் முத்துக்குமரன் தலைமை வகித்தார்.
எம்.பி., சண்முகசுந்தரம் பங்கேற்று பேசினார். இரு மாணவியருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. முதன்மை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா, மேலாளர் ரகுநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.