/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/யேசுதாசின் பிறந்த நாள் விழா: ஸ்வரலயா சங்கீத நிகழ்ச்சியேசுதாசின் பிறந்த நாள் விழா: ஸ்வரலயா சங்கீத நிகழ்ச்சி
யேசுதாசின் பிறந்த நாள் விழா: ஸ்வரலயா சங்கீத நிகழ்ச்சி
யேசுதாசின் பிறந்த நாள் விழா: ஸ்வரலயா சங்கீத நிகழ்ச்சி
யேசுதாசின் பிறந்த நாள் விழா: ஸ்வரலயா சங்கீத நிகழ்ச்சி
ADDED : ஜன 07, 2024 11:16 PM

பாலக்காடு:பிரபல இசை கலைஞர் யேசுதாசின் 84வது பிறந்த நாளை ஒட்டி, பாலக்காட்டில் ஸ்வரலயா சார்பில் சங்கீத நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட பஞ்சாயத்து கலையரங்கில், நேற்று பிரபல இசைக்கலைஞர் யேசுதாசின் 84வது பிறந்தநாளை ஓட்டி, ஸ்வரலயா சார்பில் சங்கீத நிகழ்ச்சி நடந்தது.
'யேசுதாஸ்@84' என்ற பெயர் சூட்டியுள்ள சங்கீத நிகழ்ச்சியை, பிரபல இசைக்கலைஞர் மண்ணுார் ராஜகுமாரனுண்ணி துவக்கி வைத்தார்.
ஸ்வரலயா தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் சித்ரா பங்கேற்றார்.
ஸ்வரலயா செயலாளர் அஜயன், மோகன்தாஸ் ஆகியோர் பேசினர்.
யேசுதாஸ் பாடிய பிரபல 84 பாடல்களை 64 பாடகர்கள் நிகழ்ச்சியில் பாடினர். நிகழ்ச்சியில் 'சுவரம் ஸ்வரலயம்' என்ற 25 ஆண்டு பூர்த்தி செய்யும் ஸ்வரலயாவின் நினைவு நுாலை, முன்னாள் சாகித்திய அகாதமி தலைவர் வைசாகன் வெளியிட்டார்.