Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குளங்களில் ஈர நில பறவைகள் 27ல் கணக்கெடுப்பு துவக்கம்

குளங்களில் ஈர நில பறவைகள் 27ல் கணக்கெடுப்பு துவக்கம்

குளங்களில் ஈர நில பறவைகள் 27ல் கணக்கெடுப்பு துவக்கம்

குளங்களில் ஈர நில பறவைகள் 27ல் கணக்கெடுப்பு துவக்கம்

ADDED : ஜன 24, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
உடுமலை : ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திலுள்ள, 20 குளங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி, வரும் 27 மற்றும் 28ம் தேதி நடக்கிறது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பானது, ஏரிகள் மற்றும் குளங்களில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி, வரும் 27 மற்றும் 28ம் தேதிகளில் நடக்கிறது. அதன் அடிப்படையில், ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட, மருள்பட்டி குளம், பாப்பான்குளம், செட்டியார் குளம், சின்னவீரம்பட்டி குளம், கரிசல்குளம், ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம் ஆகிய குளங்களில் நடக்கிறது.

மேலும், ராய குளம், தேன் குளம், சின்னாண்டிபாளையம் குளம், சாமளாபுரம் குளம், ராமியம் பாளையம் குளம், சங்க மாங்குளம், சேவூர் குளம், செம்மாண்டம் பாளையம் குளம், தாமரைக்குளம், நஞ்சராயன் குளம், மாணிக்காபுரம் குளம் மற்றும் உப்பாறு அணை என, 20 நீர் நிலைகளில், ஈர நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

கணக்கெடுப்பில், வனத்துறையினர், திருப்பூர் இயற்கை கழகம் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

பறவைகள் கணக்கெடுப்பு பணி குறித்து, வரும், 27ம் தேதி, பயிற்சி வகுப்பு மற்றும் கணக்கெடுப்புக்கு தேவையான தரவு புத்தகம் வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பு பணி, 28ம் தேதி, காலை, 6:30 முதல், 11: 00 மணி வரை நடக்கிறது.

இதில், நீர்நிலைகளில் வசிக்கும் பறவைகள் மற்றும் நீர்நிலைகளின் அருகில் உள்ள புதர்களில் வசிக்கும் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, பதிவு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us