ADDED : ஜன 06, 2024 12:54 AM
கோவை;மாநகராட்சி, 86வது வார்டு உக்கடம், புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்பது, இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இச்சூழலில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். கவுன்சிலர் அஹமது கபீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.