ADDED : மே 21, 2025 11:33 PM
பொள்ளாச்சி,; பாலக்காடு மாவட்டம், சித்துார் தாலுகா, மீனாட்சிபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. தமிழ் வழி பள்ளியாக சிறப்புடன் செயல்பட்டும் வருகிறது.
அவ்வகையில், கேரள அரசின் பொதுக்கல்வித்துறையால், ஆண்டுதோறும் நடத்தப்படும் கல்வி உதவித் தொகைக்கான போட்டித் தேர்வில் இப்பள்ளி நான்காம் வகுப்பு மாணவ, மாணவியர் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மேகாஸ்ரீ, மிரிதினா, பாதிலா, ஏ.அனன்யா, எம்.அனன்யா, தீப்திகா, சரண், அஜ்மல், முகமது சுஹைல், லட்சுமி, பிரதிவர்ஷா ஆகியோருக்கு தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், எஸ்.எம்.சி., மற்றும் எஸ்.எஸ்.ஜி., உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.