/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் டி.சி.கேட்டு மாணவர் போராட்டம் தனியார் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் டி.சி.கேட்டு மாணவர் போராட்டம்
தனியார் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் டி.சி.கேட்டு மாணவர் போராட்டம்
தனியார் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் டி.சி.கேட்டு மாணவர் போராட்டம்
தனியார் ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் டி.சி.கேட்டு மாணவர் போராட்டம்
ADDED : செப் 16, 2025 07:04 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள மகாராஜா அலைடு ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் மாணவர்கள் டி.சி., கேட்டு பெற்றோர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள மகாராஜா அலைடு ஹெல்த் சைன்ஸ் இன்ஸ்டிடியூட்டில், 300 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த இன்ஸ்டிடியூட்டிற்கு அங்கீகாரம் உள்ளதா, இல்லையா என மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்ததால், இரண்டு மாதத்துக்கு முன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையடுத்து, கோவை, சென்னை மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் இங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லை. கல்லுாரிக்கு அங்கீகாரம் இருக்கிறதா, இல்லையா என்பது உறுதிப்பட தெரியவில்லை.
இந்நிலையில், மாணவர்கள் சிலர் பெற்றோருடன் வந்து கல்வி சான்றிதழை திரும்ப கேட்டுள்ளனர்.
டி.சி., உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என, கல்லுாரி நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தினர் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார், கல்லூரி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களுடன் பேச்சு நடத்தினர்.
கல்லூரி நிர்வாகம் சார்பில், நான்கு நாட்களில் சான்றிதழ்களை வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து சென்றனர்.
கல்லூரி நிர்வாகத்தினர் கூறிகையில், 'எங்கள் இன்ஸ்டிடியூட்டில் அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளது.
ஒரு சில மாணவர்கள் டி.சி., வழங்க கோரி பெற்றோருடன் வந்தனர். அவர்களுக்கு நான்கு நாட்களில் டி.சி., வழங்கப்படும்,' என்றனர்.