/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம் மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம்
மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம்
மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம்
மாணவர்களால் அரசு அலுவலகங்கள் சுத்தம்
ADDED : ஜூன் 07, 2025 11:40 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அரசு அலுவலகங்களை, உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மாணவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள யுனைடெட் பப்ளிக் பள்ளி மாணவர்கள், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சமூக பொறுப்புணர்வுடன் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், பெரியநாயக்கன்பாளையம் தபால் நிலையம், வனச்சரக அலுவலக வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், தபால் நிலைய தலைமை அதிகாரி வித்யா, வனச்சரக அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.