Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர மாணவியர் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர மாணவியர் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர மாணவியர் விண்ணப்பிக்கலாம்!

ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர மாணவியர் விண்ணப்பிக்கலாம்!

ADDED : மே 31, 2025 12:28 AM


Google News
பொள்ளாச்சி : கோவையிலுள்ள, அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர விண்ணப்பிக்கலாம், என, முதல்வர் உமாதேவி தெரிவித்தார்.

கோவை ராஜவீதியிலுள்ள, அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் உமாதேவி அறிக்கை வருமாறு:

கோவை ராஜாவீதியில் உள்ள, மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு காலம் படிக்க வேண்டும்.பொதுப்பிரிவினருக்கு 50 சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும்.

பி.சி., பி.சி.,(எம்), எம்.பி.சி., டி.என்.சி., எஸ்.சி, எஸ்.சி.,(ஏ), எஸ்.டி., பிரிவினருக்கு 45 சதவீத மதிப்பெண் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், ஜூலை, 31ம் தேதியன்று, 30வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 35 வயதுக்கு மிகாமலும், ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் கைம்பெண்கள், 40 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கலப்பின தம்பதியரில் பொது பிற்படுத்தப்பட்டோர், பி.சி.,(எம்), மற்றும் எம்.பி.சி., பிரிவினர், 32வயதுக்கு மிகாமலும்; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும் இருந்தல் வேண்டும்.

விண்ணப்பத்துக்கு, 'ஆன்லைன்' கட்டணமாக, எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள், 250 ரூபாய்; மற்றவர்கள், 500 ரூபாய் செலுத்த வேண்டும். சேர்க்கைகட்டணமாக, 3,500 ரூபாய், கல்வி கட்டணமாக, 1,500 ரூபாய் செலுத்த வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படம், மாற்றுச்சான்றிதழ், சலுகை கோரும் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கடந்த, 26ம் தேதி நேரடி சேர்க்கை துவங்கப்பட்டது. வரும், 6ம் தேதி வரை சேர்க்கை நடைபெறுகிறது.https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாகவோ, கோவை அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரங்களுக்கு தொடர்பு கொள்ள 0422 - 2399315 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us