ADDED : ஜூன் 12, 2025 11:41 PM
தொண்டாமுத்தூர்; உலியம்பாளையம், ஜீவகாந்தம் நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 50. இவரது மகன் ராகுல், 15. உலியம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.
தனக்கும் மொபைல் போன் வேண்டும் என, வீட்டில் கூறியுள்ளார். ஒரு வாரத்தில், மொபைல் போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளனர். மொபைல் போன் வாங்கி தராததால், இரண்டு நாட்களாக ராகுல் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத போது, ராகுல் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.