/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரோட்டோரம் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; தொடரும் நெரிசல்ரோட்டோரம் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; தொடரும் நெரிசல்
ரோட்டோரம் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; தொடரும் நெரிசல்
ரோட்டோரம் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; தொடரும் நெரிசல்
ரோட்டோரம் விதிமீறி வாகனங்கள் நிறுத்தம்; தொடரும் நெரிசல்

பகலில் ஒளிரும் மின்விளக்கு
கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மின்கம்பத்தில், பகல் நேரத்தில் விளக்கு ஒளிர்கிறது. இதனால் மின்சாரம் வீணாகிறது. இதை தவிர்க்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் கவனிக்கணும்!
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், மகாலிங்கபுரம் பகுதிக்கு திரும்பும் இடத்தில், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்க, அப்பகுதியில் போலீசார் நியமித்து போக்குவரத்து ஒழுங்குபடுத்தி, மகாலிங்கபுரம் செல்லும் வாகனங்கள் ரோட்டை கடக்க நேரம் ஒதுக்க வேண்டும்.
'லொள்' தொல்லை
உடுமலை நகராட்சி சிங்கப்பூர் நகரில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை மக்களை துரத்தி கடிக்கின்றன. இதனால், மக்கள் ரோட்டில் நடமாட அச்சமடைகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, தளி ரோட்டில் வாகனங்கள் ரோட்டோரம் விதிமுறை மீறி நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் விதிமுறை பின்பற்றி நிறுத்துவதற்கு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீசார் கவனத்துக்கு
உடுமலை - பழநி ரோட்டில், தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விதிமீறி வாகனங்கள் நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறுக்குப்பட்டை அகற்றப்படுமா?
கிணத்துக்கடவு - வடசித்துார் ரோட்டில், கொண்டம்பட்டி வரை அதிகளவு குறுக்கு பட்டை அமைத்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டில் உள்ள குறுக்கு பட்டையின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்வாய் சேதம்
பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, 4வது வார்டு, விவேகானந்தர் வீதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் இடிந்த நிலையில் உள்ளது. இதனால், கழிவு நீர் இடிந்த இடத்தில் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
கழிவுகளை அகற்றணும்
உடுமலை, சின்னவீரம்பட்டி ரோட்டோரத்தில் கழிவுகள் குவிக்கப்படுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. அவ்வழியாக செல்லும்போது மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் காற்றில் பறந்து ரோட்டிலும் பரவுவதால், வாகன ஓட்டுநர்கள் முகம் சுழிக்கின்றனர்.
எரியாத தெருவிளக்குகள்
உடுமலை, சுவுதாமலர் லே -அவுட்டில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. மாலை நேரங்களில் அப்பகுதியினர், வெளியில் சென்றுவருவதற்கு வீதியில் இருள் சூழ்ந்திருப்பதால் அச்சப்படுகின்றனர். தெருநாய்களும் பொதுமக்களை அடையாளம் காணாமல் இருளில் துரத்தி சென்று மிரட்டுகின்றன.
சேதமடைந்த ரோடு
உடுமலை, பெரியகோட்டை ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் இரண்டாவது வீதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியில் செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். முதியர்வர்கள் ரோட்டை பயன்படுத்துவதற்கும் சிரமப்படுகின்றனர்.
தடுப்பு வையுங்க!
பொள்ளாச்சி - கோவை ரோட்டில் இருந்து கோதவாடி, நல்லட்டிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள தரை பாலத்தின் ஓரத்தில் தடுப்பு இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறுகின்றனர். கால்நடைகள் போக்குவரத்து இப்பகுதியில் அதிகமாக இருப்பதால், பாலத்தின் ஓரத்தில் தடுப்பு அமைக்க வேண்டும்.
ரோட்டோரத்தில் குப்பை
பொள்ளாச்சி, சி.டி.சி., டிப்போ அருகே ரோட்டோரத்தில் குப்பை அதிகமாக உள்ளது. இதனால், அவ்வழியில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. குப்பை காற்றில் பறந்து வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். குப்பையை அகற்ற வேண்டும்.