/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிரதான ரோட்டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து; சிறப்பு திட்டங்கள் அவசியம்பிரதான ரோட்டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து; சிறப்பு திட்டங்கள் அவசியம்
பிரதான ரோட்டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து; சிறப்பு திட்டங்கள் அவசியம்
பிரதான ரோட்டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து; சிறப்பு திட்டங்கள் அவசியம்
பிரதான ரோட்டில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து; சிறப்பு திட்டங்கள் அவசியம்
ADDED : ஜன 04, 2024 12:02 AM

உடுமலை : நகரின் பிரதான ரோடாக உள்ள தளி ரோட்டில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு, நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பிரியும் தளி ரோடு நகரின் பிரதான ரோடாக உள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து திருமூர்த்திமலை, அமராவதி அணை, மறையூர், மூணாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும், சுற்றுலா வாகனங்கள் இந்த ரோட்டின் வழியாகவே செல்கின்றன.
மேலும், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் உள்ளூர் வாகன போக்குவரத்தும் தளி ரோடு வழியாகவே செல்ல வேண்டும். மேலும், நுாற்றுக்கணக்கான கடைகளும் இந்த ரோட்டில் அமைந்துள்ளன.
இதனால், தளி ரோட்டில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும். காலை, மாலை நேரங்களில், இருசக்கர வாகனங்கள் அவ்வழியாக செல்ல திணற வேண்டியுள்ளது. இரவு நேரங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அளவு நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார், பார்க்கிங் விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர். அதன்படி நான்கு சக்கர வாகனங்கள், தளி ரோட்டில் நிறுத்தாமல், குட்டைத்திடலில், நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது; தொடர் கண்காணிப்பும் செய்கின்றனர். இருப்பினும், குறுகலான ரோட்டில் நெரிசல் குறைவதில்லை.
குறிப்பாக, கச்சேரி வீதி பிரியும் இடத்தில், பஸ் ஸ்டாப் உள்ளது. குறுகலான இடத்தில், பஸ்களை நிறுத்தும் போது பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை.
அப்பகுதியில் குட்டைத்திடலில் இருந்து வரும் வாகனங்களும் ரோட்டை கடக்க முயல்வதால், விபத்துகளும் ஏற்படுகிறது.
இவ்வாறு, தளி ரோடு சிக்னல் முதல் மேம்பாலம் வரை, வாகன ஓட்டுநர்கள் திணற வேண்டியுள்ளது.பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, போக்குவரத்து போலீசார், நகராட்சி, வருவாய்த்துறையினர் இணைந்து ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்பு தளி ரோடு ஒருவழிப்பாதையாக இருந்தது; பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் வாகனங்கள் ராஜேந்திரா ரோடு வழியாக சென்று வந்தன. இதனால், நெரிசல் வெகுவாக குறைந்திருந்தது.
தற்போது இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்து, புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கச்சேரி வீதி பஸ் ஸ்டாப்பை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.