Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விலங்குகளை தடுக்க உருக்கு கம்பி வேலி : சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கோவையில் ஆய்வு

விலங்குகளை தடுக்க உருக்கு கம்பி வேலி : சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கோவையில் ஆய்வு

விலங்குகளை தடுக்க உருக்கு கம்பி வேலி : சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கோவையில் ஆய்வு

விலங்குகளை தடுக்க உருக்கு கம்பி வேலி : சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் கோவையில் ஆய்வு

UPDATED : செப் 22, 2025 07:58 PMADDED : செப் 06, 2025 02:45 AM


Google News
Latest Tamil News
கோவை: கோவையில், உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடங்களை, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கர வர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கோவை, போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட குப்பேபாளையம், ஆதிநாராயணன் கோவில் அருகே உருக்கு கம்பி வேலி அமைக்கும் இடத்தை ஆய்வு செய்த நீதிபதிகள் இருவரும், வேலி அமைப்பதற்கான அவசியத்தை கேட்டனர்.

அதற்கு, 'உருக்கு கம்பி வேலி எவ்வாறு அமைக்கப்பட உள்ளது. இந்த கம்பி வேலிகளால் வனவிலங்கு களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என, ஒசூரில் அமைக்கப்பட்டுள்ள உருக்கு கம்பி வேலி மூலம் தெரியவந்துள்ளது' என, தெரிவித்த மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதால், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து எடுத்துரைத்தார்.

ஒசூரில் அமைக்கப்பட்ட உருக்கு கம்பி வேலியால், காட்டு யானைகள் தடுக்கப்பட்டது தொடர்பான வீடியோவையும் நீதிபதிகளுக்கு காட்டினார்.

காட்டு யானைகள் ஊடுருவலால், 15 ஆண்டுகளாக ஏற்பட்ட பாதிப்புகள், சேதங்கள் மற்றும் காட்டு யானையை ஊருக்குள் புகாமல் தடுக்க வேண்டியது குறித்து விவசாயிகள் மனு கொடுத்தனர்.

அதன் பின், பேரூர் தாலுகா, வெள்ளெருக்கம்பாளையத்தில், பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக கனிம வளம் வெட்டி எடுப்பட்ட இடத்தையும், நீதிபதிகள் பார்வையிட்டனர்.

'அனுமதியின்றி கனிம வளங்கள் எடுத்துச் சென்றால், உடனுக்குடன் வழக்கு பதிந்து, லாரிகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. மண் கடத்தலை தடுக்க கோவை மாவட்டம் முழுதும் கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.

அங்கிருந்து, ட்ரோன் கேமரா பறக்க விட்டு, சுற்றுப்பகுதியில், தற்போது மண் எடுக்கப்படுகிறதா, விவசாய நிலங்கள் எவ்வாறு உள்ளன என்பதை, நேரடியாக ட்ரோன் வீடியோ மூலம் நீதிபதிகள் பார்வையிட்டனர்.

இன்று வனத்துறை அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் நீதிபதிகள் பங்கேற்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us