/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநில அளவிலான கபடிரத்தினம் பெண்கள் முதலிடம்மாநில அளவிலான கபடிரத்தினம் பெண்கள் முதலிடம்
மாநில அளவிலான கபடிரத்தினம் பெண்கள் முதலிடம்
மாநில அளவிலான கபடிரத்தினம் பெண்கள் முதலிடம்
மாநில அளவிலான கபடிரத்தினம் பெண்கள் முதலிடம்
ADDED : ஜன 05, 2024 12:30 AM

கோவை;ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் ரத்தினம் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது.
ஈரோடு, சத்தியமங்கலம் தமிழன் கபடி குழு சார்பில் பெண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிட்டன.
இதில் பங்கேற்ற ரத்தினம் கல்லுாரி அணி முதல் அரை இறுதி போட்டியில் கொடிவேரி எஸ்.டி.எப்.எக்ஸ் அணியை 24 - 9 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில், திருப்பூர் இளஞ்சிட்டுக்கள் அணி 15 - 14 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.வி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியை வீழ்த்தியது.
பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் ரத்தினம் கல்லுாரி அணி 17 - 6 என்ற புள்ளி கணக்கில் இளஞ்சிட்டுக்கள் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
வெற்றி பெற்ற மாணவியரை கல்லுாரியின் முதன்மை செயல் அதிகாரி மாணிக்கம், முதல்வர் பாலசுப்ரமணியன், உடற்கல்வித்துறை இயக்குனர் ஜாய்சி, உடற்கல்வித்துறை உதவி இயக்குனர் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.