/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா
ADDED : ஜூன் 30, 2025 12:07 AM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றம், கடந்த, 22ம் தேதி நடந்தது. தி
ருப்பூர் குமார் நகர் பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை ஆற்றி கொடியேற்றி வைத்தார். கடந்த சனிக்கிழமை வரை நடந்த நவநாள் திருப்பலிகளை கிளாட்வின் ஆண்டனி, ஜெரோம், தாமஸ் ஜான் பீட்டர், ஜேக்கப், ஆல்பர்ட் செல்வராஜ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினர். ஒவ்வொரு நாளும் வேண்டுதல் தேர் நடைபெற்றது.
நேற்று காலை திருவிழா சிறப்பு கூட்டுப் பாடற்பலியை கோவை மறை மாவட்ட பொருளாளர் பாதிரியார் ஆண்டனி செல்வராஜ் நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து மாலையில் தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கோவை வட்டார தலைமை பாதிரியார் விக்டர் திருப்பலியை நிறைவேற்றினார். இதில் முன்னாள் பங்கு பாதிரியார்கள், மண்ணின் மைந்தர்கள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து கப்பல் வடிவ அலங்காரத் தேரில், புனித அந்தோணியார் சொருபம் கப்பல் வைக்கப்பட்டது.
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட ஆடம்பர மின் அலங்காரத்தேர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. பின்பு நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் பிலிப் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.