Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா; நகரில் பக்தி இசை நிகழ்ச்சி

ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா; நகரில் பக்தி இசை நிகழ்ச்சி

ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா; நகரில் பக்தி இசை நிகழ்ச்சி

ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா; நகரில் பக்தி இசை நிகழ்ச்சி

ADDED : செப் 21, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி; பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவின், 100 வது பிறந்த நாள், வரும் நவ., 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆந்திராவின் புட்டப்பர்த்தியில் உள்ள அவரது ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் கொண்டாடப்படவுள்ள நுாற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

அதேநேரம், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், அவரது அன்பு மற்றும் சேவை குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

அதன்ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் கோவை மாவட்ட சத்யசாய் சேவா நிறுவனங்கள் மற்றும் பொள்ளாச்சி சாய்மதுரம், சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்யசாய் பாபாவின் திருவுருவ பட ரத ஊர்வலம் சாய் கானாம்ருதம் என்ற பக்தி இசை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ரத ஊர்வலம், சாய் மதுரத்தில் இருந்து துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக, பல்லடம் ரோடு கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் நிறைவு பெறுகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சாய் கானாம்ருதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us