/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஸ்ரீ மகா கணபதி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் ஸ்ரீ மகா கணபதி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ஸ்ரீ மகா கணபதி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ஸ்ரீ மகா கணபதி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ஸ்ரீ மகா கணபதி கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 08, 2025 10:45 PM

கோவை; உப்பிலிபாளையம் கோ ஆப்பரேட்டிவ் காலனியில் அமைந்துள்ள, ஸ்ரீ மகா கணபதி திருக்கோவிலில் பக்தர்கள் சூழ அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா, கடந்த 7ம் தேதி காலை 8:00 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, கணபதிஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்துசாந்தி, காப்புகட்டுதல் அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.
இரவு 8:00 மணிக்கு மங்கள இசை, பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், கும்பஅலங்காரம், யாகசாலை பிரவேசம், வேதிகா அர்ச்சனை, மூலமந்திர காயத்ரி ஹோமம் நடந்தது.
நேற்று காலை 4 மணிக்கு மங்களஇசையுடன் நிகழ்ச்சிகள் துவங்கி, மூலமந்திரஜப ஹோமங்கள், மஹாபூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.
காலை 7:30 மணிக்கு விமானம் மற்றும் ஸ்ரீ மகாகணபதி பரிவாரமூர்த்திகள் மஹாகும்பாபிஷே கம் , தசதரிசனம், அபிஷே கம் மஹாதீபாராதனை ஆகியவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மஹா கும்பாபிஷே க விழா, சர்வசாதகர் ராஜலிங்கசிவாச்சாரியர், கிருபாகர சிவாச்சாரியர் ஆகியோர் தலைமையில் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.