/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டிபள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 9, 10ல் பேச்சு, கட்டுரை போட்டி
ADDED : ஜன 04, 2024 12:11 AM
கோவை : தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கோவையில் வரும், 9 மற்றும், 10ம் தேதிகளில், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு பேச்சு, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகள், டவுன்ஹாலில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரியில், காலை, 10:00 முதல் நடத்தப்பட உள்ளன. 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பள்ளி அளவிலும், 10ம் தேதி (புதன்கிழமை) கல்லுாரி அளவிலும் போட்டி நடத்தப்படும். ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம், ஒரு பள்ளி/ ஒரு கல்லுாரியில் இருந்து மூவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 வழங்கப்படும்.
போட்டி நடைபெறும் அன்றே முடிவு அறிவிக்கப்படும்; பரிசு தொகை பின்னர் வழங்கப்படும். போட்டி துவங்குவதற்கு முன், நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில், தலைப்புகள் அறிவிக்கப்படும் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.