Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தயார் ஆகிறது சிறப்பு சிகிச்சை மையம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தயார் ஆகிறது சிறப்பு சிகிச்சை மையம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தயார் ஆகிறது சிறப்பு சிகிச்சை மையம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தயார் ஆகிறது சிறப்பு சிகிச்சை மையம்

ADDED : மே 11, 2025 12:19 AM


Google News
கோவை: கோவை அரசு மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தனித்து விடப்பட்டவர்களை மீட்டு, சிகிச்சை அளிக்கும் வகையில், பிரத்யேக மையம் தயாராகிறது.

வீடற்று, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு, சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக அரசு, கடந்த பிப்., மாதம், மாநில அளவிலான கொள்கையை வெளியிட்டது.

இதன்படி, சாலையோரங்களில் ஆதரவு இன்றி, சுற்றித்திரிபவர்களை அடையாளம் கண்டு, அவசர சிகிச்சை, இடைநிலை மருத்துவ கவனிப்பு, நீண்டகால பராமரிப்பு, மறுவாழ்வு அளிக்கும் வகையில் வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இப்புதிய கொள்கையின் படி, கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம், 15 படுக்கை வசதியுடன் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

டீன் நிர்மலா கூறுகையில், ''கோவை அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் சாலையோரங்களில் ஆதரவு இன்றியுள்ள, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், தயாராகி வருகிறது.

இதன் வாயிலாக, சாலையோரம் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். சிகிச்சைக்கு பின் அவரவர் வீடுகளுக்கு செல்லவோ, அல்லது இல்லங்களில் சேர்க்கவோ, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us