ADDED : ஜன 23, 2024 01:56 AM

போத்தனூர்;அயோத்தியில் ராமர் பிராண பிரதிஷ்டை முன்னிட்டு, அருள்முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
காலை, 11:30 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. தொடர்ந்து பக்தி பாடல்கள் பாடப்பட்டன. அகன்ற திரை மூலம் அயோத்தியில் நடந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. ராமரின் உருவபடத்திற்கு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
* மதுக்கரை சந்தோஷிமாதா கோவிலில், அயோத்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. குரும்பபாளையம் சாலையிலுள்ள, சிவகிரி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


