Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மகாளய அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை; ஆற்றங்கரையில் முன்னோர் வழிபாடு

மகாளய அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை; ஆற்றங்கரையில் முன்னோர் வழிபாடு

மகாளய அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை; ஆற்றங்கரையில் முன்னோர் வழிபாடு

மகாளய அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை; ஆற்றங்கரையில் முன்னோர் வழிபாடு

ADDED : செப் 21, 2025 10:53 PM


Google News
Latest Tamil News
- நிருபர் குழு -

பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

இதேபோல, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், மாலைபக்த ஆஞ்சநேயருக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன

தவிர, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், அழகு நாச்சியம்மன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

உடுமலை மகாளய அமாவாசையையொட்டி, அமராவதி உள்ளிட்ட ஆற்றங்கரைகளில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபட்டனர்.முன்னோர்களுக்கு ஆடி, தை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில், திதி கொடுப்பது பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, உடுமலை சுற்றுப்பகுதி மக்கள், திருமூர்த்திமலை பாலாற்றங்கரையிலும், கொழுமம் உள்ளிட்ட அமராவதி ஆற்றின் பல இடங்களிலும், முன்னோருக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

உடுமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குலதெய்வ கோவில்களிலும், வீடுகளில் படையல் வைத்தும் மக்கள் வழிபாடு செய்தனர்.

வால்பாறை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, மகாளய அமாவாசை தினமான நேற்று காலை, 6:00 மணிக்குபால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வால்பாறை எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் காலை, 7:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 9:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன்கோவில்களில் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன.

வால்பாறை சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சியில் மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us