/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொலையாளியை பிடிக்க தனிப்படை தீவிரம் கொலையாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்
கொலையாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்
கொலையாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்
கொலையாளியை பிடிக்க தனிப்படை தீவிரம்
ADDED : ஜூன் 08, 2025 10:35 PM
சூலுார்; அரசூர் அருகே காட்டில், பீகார் மாநில தொழிலாளியை கொலை செய்தவர்களை, தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரசூர் - சரவணம்பட்டி ரோட்டில், பாக்கு தோப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் உள்ள காட்டில், நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், அந்நபர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுபான் அன்சாரி, 50 என்பது தெரிந்தது. கடந்த, 6ம் தேதி, அந்நபர் டாஸ்மாக் கடைக்கு வந்ததும், அதன் பின்னர் கொலை செய்யப்பட்டதும் தெரிந்தது. சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடுகின்றனர்.