/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிள்ளையப்பம்பாளையத்தில் 24ல் சிறப்பு முகாம் பிள்ளையப்பம்பாளையத்தில் 24ல் சிறப்பு முகாம்
பிள்ளையப்பம்பாளையத்தில் 24ல் சிறப்பு முகாம்
பிள்ளையப்பம்பாளையத்தில் 24ல் சிறப்பு முகாம்
பிள்ளையப்பம்பாளையத்தில் 24ல் சிறப்பு முகாம்
ADDED : செப் 21, 2025 11:09 PM
அன்னுார்; பிள்ளையப்பம்பாளையத்தில், மூன்று ஊராட்சி மக்களுக்கு, வரும் 24ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அன்னுார் தாலுகாவில், கரியாம்பாளையம், பிள்ளையப்பம் பாளையம், காரேகவுண்டன்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு வரும் 24ம் தேதி பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகி அம்மன் மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெறுகிறது.
காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறுகிறது. முகாமில், மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு, ஆதார் திருத்தம், நில அளவை, பட்டா மாறுதல், தொகுப்பு வீடு, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு மனு அளிக்கலாம். வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்துறை உள்ளிட்ட 17 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
45 வகையான சேவைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்,' என, வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.