Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குழந்தைகளுக்கான சிறப்பு ஆதார் முகாம்

குழந்தைகளுக்கான சிறப்பு ஆதார் முகாம்

குழந்தைகளுக்கான சிறப்பு ஆதார் முகாம்

குழந்தைகளுக்கான சிறப்பு ஆதார் முகாம்

ADDED : செப் 17, 2025 09:52 PM


Google News
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில், குழந்தைகளுக்கான ஆதார் சிறப்பு முகாம், வருகிற, 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய அஞ்சல் துறை சார்பில், மேட்டுப்பாளையம் தலைமை தபால் நிலையத்தில், குழந்தைகளுக்கான ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பிறந்த குழந்தை முதல், ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, புதிய ஆதார் எடுக்கப்படும்.

மேலும் ஐந்து முதல், 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, ஆதார் திருத்தம் புதுப்பிக்கும் சிறப்பு முகாம், வருகிற, 20ம் தேதி வரை நடைபெறும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள, 9344925806 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு மேட்டுப்பாளையம் தலைமை தபால் அலுவலர் நாகஜோதி அறிக்கையில் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us