/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தென்மாநில அளவிலான கால்பந்து; வி.எஸ்.எஸ்.எம்., மாணவர் தேர்வு தென்மாநில அளவிலான கால்பந்து; வி.எஸ்.எஸ்.எம்., மாணவர் தேர்வு
தென்மாநில அளவிலான கால்பந்து; வி.எஸ்.எஸ்.எம்., மாணவர் தேர்வு
தென்மாநில அளவிலான கால்பந்து; வி.எஸ்.எஸ்.எம்., மாணவர் தேர்வு
தென்மாநில அளவிலான கால்பந்து; வி.எஸ்.எஸ்.எம்., மாணவர் தேர்வு
ADDED : ஜூன் 30, 2025 10:55 PM
போத்தனூர்; கோவை, சுந்தராபுரம், சாரதா மில் சாலையிலுள்ள வி. எஸ்.செங்கோட்டையா நினைவு உயர்நிலை பள்ளியில் (வி.எஸ்.எஸ்.எம்.,), ஏழாம் வகுப்பு மாணவன் அகிலேஷ்.
கடந்த நான்காண்டுகளாக, மாச்சம்பாளையத்திலுள்ள யூத் பிரண்ட்ஸ் புட்பால் கிளப் அகாடமி பயிற்சியாளர் லூயிஸ் என்பவரிடம், கால்பந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்தாண்டு, 10 வயதிற்குட்பட்டோருக்கான தெற்காசிய அளவில், நேபாளத்தில் நடந்த போட்டியில் பங்கேற்றார்.
தொடர்ந்து, 12 வயதுக்குட்பட்டோருக்கான தென்மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வு, கடந்த மே மாதம் கோவையில் நடந்தது. இதில் தேர்வான அகிலேஷ், தற்போது பெங்களூருவில், கேரளாவின் புளூ பேந்தர்ஸ் அணிக்காக தொழில்முறை வீரராக களமிறங்கி விளையாடி வருகிறார்.
மாணவரை பள்ளி தாளாளர் பிருத்விராஜ், தலைமையாசிரியர் பிரபாவதி, உடற்கல்வி ஆசிரியர் வினிதா மோல், பயிற்சியாளர் லூயிஸ், அகாடமி உரிமையாளர் கார்த்தி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.