/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நெரிசலுக்கு தீர்வு காணுங்க: ரோட்டையும் விரிவுபடுத்தணும் நெரிசலுக்கு தீர்வு காணுங்க: ரோட்டையும் விரிவுபடுத்தணும்
நெரிசலுக்கு தீர்வு காணுங்க: ரோட்டையும் விரிவுபடுத்தணும்
நெரிசலுக்கு தீர்வு காணுங்க: ரோட்டையும் விரிவுபடுத்தணும்
நெரிசலுக்கு தீர்வு காணுங்க: ரோட்டையும் விரிவுபடுத்தணும்
ADDED : ஜன 28, 2024 09:14 PM
வால்பாறை:வால்பாறை நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண, ரோட்டை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வால்பாறையை சுற்றிப்பார்க்க, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் மிகவும் குறுகலான இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
இந்த ரோட்டின் இருபுறமும், போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'நகரில் அடிக்கடி நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண ரோட்டை விரிவுபடுத்த வேண்டும். சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் நிறுத்த மாற்று இடம் ஒதுக்க வேண்டும். நகரில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, ரோட்டை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
கோவில் ரோடு ஆக்கிரமிப்பு
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் நுழைவு வாயிலின் முன், வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதனால் இந்த ரோட்டில் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. கோவிலின் முன்புறம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, வாகனங்கள் நிறுத்தப்படுவதையும், போலீசார் தடுக்க வேண்டும் என்பது, பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.