/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மலைப்பாதையில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்புமலைப்பாதையில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
மலைப்பாதையில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
மலைப்பாதையில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
மலைப்பாதையில் பனிமூட்டம்; சுற்றுலா பயணியர் கண்டு ரசிப்பு
ADDED : ஜன 03, 2024 11:57 PM

வால்பாறை : வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் நிலவும் பனிப்பொழிவால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின் நிலவும் சிதோஷ்ண நிலை மாற்றத்தால், பகல் நேரத்தில் கடும் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
வால்பாறையில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர். வால்பாறை அடுத்துள்ள கவர்க்கல், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை, மாலை நேரத்தில் நிலவும் பனி மூட்டத்தை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
குறிப்பாக, கவர்க்கல் - பொள்ளாச்சி ரோட்டில் நிலவும் பனிமூட்டத்தால், வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு இயக்கப்படுகின்றன.