Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது சிறுதானியங்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது சிறுதானியங்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது சிறுதானியங்கள்

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது சிறுதானியங்கள்

ADDED : மே 26, 2025 05:07 AM


Google News
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணவேணி கூறியிருப்பதாவது:-

சிறுதானியங்களில் நார்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் அதிகமாக காணப்படுவதால், நாம் அதை உண்ணும்போது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது.

சிறுதானியங்களில் உள்ள மாவுச்சத்து மெதுவாக செரிமானமாவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு ஆகும். ஆகவே, நம் மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியினை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் 2025--26ம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. அதன் படி, கோவை மாவட்டத்தில் உழவர் குழுக்கள் அமைத்தல், மாற்றுப்பயிர் சாகுபடி திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படவுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவீத மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த இயக்கத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.---





      Our Apps Available On




      Dinamalar

      Follow us