Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேவைப்படும் திறன்கள் சாதிப்பதற்கான வரங்கள்

தேவைப்படும் திறன்கள் சாதிப்பதற்கான வரங்கள்

தேவைப்படும் திறன்கள் சாதிப்பதற்கான வரங்கள்

தேவைப்படும் திறன்கள் சாதிப்பதற்கான வரங்கள்

ADDED : செப் 25, 2025 12:33 AM


Google News
தொ ழில்நுட்பம் வேகமாக வளர்கிறது; வேலைக்கான உலகமும் தினசரி மாறுகிறது. இன்று தேவைப்படும் திறன்கள், நாளை தேவைப்படாது போகலாம். போட்டிகள் நிறைந்த உலகில் நாம் வெற்றி பெற முன்னேற்றங்களுக்கு ஏற்ப நம் திறன்களை தொடர்ந்து புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பிரச்னைகளுக்கு தீர்வு: பிரச்னை தீர்க்கும் திறன் என்பது சிக்கல்களை அடையாளம் கண்டு, பகுப்பாய்வு செய்து தீர்வுகளை உருவாக்கும் திறனாகும்.

இது சிக்கலான தகவல்களைப் புரிந்து கொள்வது, பிரச்னைகளுக்கு தீர்வு கொண்டு வருவது மற்றும் முடிவுகளை எடுப்பது ஆகியவற்றை உள்ளடக்கியது.

பிரச்னை தீர்க்கும் திறன் அனைத்து தொழில்களுக்கும் முக்கியமானது. ஊழியர்கள் தங்கள் வேலையில் சவால்களை எதிர்கொள்ளும்போது அதைப் பயன்படுத்த வேண்டும்.

புதுமைத்தீர்வுகள் படைப்பாற்றல்: படைப்பாற்றல், புதிய யோசனைகளை உருவாக்கும் திறனாகும். இரு சிக்கல்களை புதிய வழிகளில் சிந்தித்து புதுமையான தீர்வுகளைக் கொண்டுவர உதவும்.

புதிய மாற்றத்தைக் கொண்டு வரலாம். எல்லா தொழிலுக்கும் படைப்பாற்றல் மிகவும் முக்கியமானது. போட்டிகளுக்கு மத்தியில் நாம் சற்று வித்தியாசமாக இருந்தால் மட்டுமே தொழிலில் வெற்றியடைய முடியும்.

டிஜிட்டல் திறன்கள்: டிஜிட்டல் திறன்கள் என்பது க ணினிகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தி தகவல்களை அணுகவும், செயலாக்கவும், உருவாக்கவும், தொடர்பு கொள்ளவும் தேவையான திறன்களை வளர்த்துக் கொள்வ தாகும்.

இதில் மென்பொருள் பயன்பாடுகள் மின்னஞ்சல்கள் இணையத் தேடல் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது போன்றவை அடங்கும். இன்றைய காலத்தில் டிஜிட்டல் திறன்கள் அனைத்து தொழில்களுக்கும் அவசியம். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளுக்கு தொழில் நுட்பத்தையே தற்போது நம்பியுள்ளனர்.

மதிப்பீடு முக்கியம் வி மர்சன சிந்தனைத் திறன்: இருக்கும் தகவல் களின் ஆதாரத்தை மதிப்பீடு செய்து, அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து சரியான முடிவுகளை எடுப்பது சிறந்தது. இன்றைய காலத்தில் விமர்சன சிந்தனை திறன் எல்லா தொழில்களுக்கும் முக்கியமானது. ஏனெனில் ஊழியர்கள் தகவல்களை மதிப்பீடு செய்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.

தொடர்புகொள்ளும் திறன்: தொடர்பு திறன் என்பது நமது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை தெளிவாகவும் சுருக்கமாகவும் வாய்வழி அல்லது எழுத்து மூலமாக தெரிவிக்கும் திறனாகும். திறம்பட பேசுவது, எழுதுவது, கேட்பது மற்றும் படிப்பது ஆகியவை அடங்கும். தொடர்பு திறன் அனைத்து தொழில்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். சக ஊழியர்கள் மேலாளர்கள் மற்றும் வாடி க்கையாளர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ள இது உதவும். இதை எப்போதும் தேவைப்படும் திறன் எனலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us