Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒப்பந்தப்படி சிறுவாணி தண்ணீர் 10.20 கோடி லிட்டர் தருவிப்பு

ஒப்பந்தப்படி சிறுவாணி தண்ணீர் 10.20 கோடி லிட்டர் தருவிப்பு

ஒப்பந்தப்படி சிறுவாணி தண்ணீர் 10.20 கோடி லிட்டர் தருவிப்பு

ஒப்பந்தப்படி சிறுவாணி தண்ணீர் 10.20 கோடி லிட்டர் தருவிப்பு

ADDED : ஜூன் 20, 2025 01:25 AM


Google News
கோவை: தமிழக - கேரள அரசுகள் இடையே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, சிறுவாணி அணையில் இருந்து, நேற்று, 10.20 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர், கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அதற்காக, அணையில் இருந்து நாளொன்றுக்கு, 10.1 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் எடுத்துக் கொள்ள தமிழக அரசும், கேரள அரசும் ஒப்பந்தம் செய்துள்ளன.

அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி இருந்தால், ஒப்பந்தப்படி எடுக்கப்படும். இல்லையெனில், குறைத்து எடுக்கப்படும். அணையில் உபரி நீர் வெளியேறும் தடுப்பணை பகுதியில் நீர்க்கசிவு ஏற்படுவதால், பாதுகாப்புக்காக, 44.61 அடிக்கு நீர் இருப்பு வைக்க, கேரள நீர்ப்பாசனத்துறை முடிவு செய்திருக்கிறது.

அணைப்பகுதியில் மழைப்பொழிவு தொடர்வதாலும், அருவிகளில் இருந்து நீர் வரத்து காணப்படுவதாலும், மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மதகை திறப்பதற்கு பதிலாக, மாற்று ஏற்பாடாக, ஒப்பந்தப்படி, 10.1 கோடி லிட்டர் தண்ணீர் வழங்க, தமிழக அதிகாரிகள் வலியுறுத்தினர். அதையேற்று, 50 செ.மீ., உயரத்துக்கு திறக்கப்பட்டிருந்த மதகு, 15 செ.மீ., என குறைக்கப்பட்டது. நேற்றைய தினம், 10.20 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.

அணை பகுதியில், 42 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. நீர் மட்டம், 41.49 அடியாக இருந்தது. அடிவாரத்தில், 21 மி.மீ., பதிவானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us