Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறுவாணி அணை நீர் மட்டம் 8 நாட்களில் 20.43 அடி உயர்ந்தது

சிறுவாணி அணை நீர் மட்டம் 8 நாட்களில் 20.43 அடி உயர்ந்தது

சிறுவாணி அணை நீர் மட்டம் 8 நாட்களில் 20.43 அடி உயர்ந்தது

சிறுவாணி அணை நீர் மட்டம் 8 நாட்களில் 20.43 அடி உயர்ந்தது

ADDED : ஜூன் 01, 2025 07:05 AM


Google News
கோவை : சிறுவாணி அணையின் நீர் மட்டம், மே 24 முதல், 31 வரையிலான எட்டு நாட்களில், 20.43 அடி உயர்ந்திருக்கிறது. நேற்றைய தினம், 38.28 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.

தென்மேற்கு பருவமழை ஒரு வாரத்துக்கு முன்னதாக மே 24ல் துவங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை அமைந்துள்ள பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையில், 30 மி.மீ., அடிவாரத்தில், 14 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. 38.28 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது.

பருவ மழை துவக்கத்துக்கு முன், மே 23ல் 17.85 அடியாக நீர் மட்டம் இருந்தது. 24 முதல், 31 வரையிலான எட்டு நாட்களில், 20.43 அடி நீர் மட்டம் அதிகரித்திருக்கிறது.

பருவ மழை காலம் செப்., வரை இருப்பதால், நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. நேற்றைய தினம், 8.25 கோடி லிட்டர் தண்ணீர் தருவிக்கப்பட்டு, வினியோகிக்கப்பட்டது.

அணையின் மொத்த உயரம் - 50 அடி. பாதுகாப்பு காரணங்களால், 45 அடிக்கு மட்டுமே நீர் தேக்க, கேரள நீர்ப்பாசனத்துறை அறிவுறுத்தியுள்ளது. அணை பகுதியில் ஏற்படும் நீர்க்கசிவு இன்னும் சரி செய்யப்படாததால், இவ்வாண்டும், 45 அடிக்கே நீர் தேக்க முடியும்.

மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு:


பீளமேடு விமான நிலையம் - 1.40 மி.மீ., வேளாண் பல்கலை - 4.40, பெரியநாயக்கன்பாளையம் - 1.60, மேட்டுப்பாளையம் - 4,அன்னுார் - 1.20, கோவை தெற்கு - 4.40, தொண்டாமுத்துார் - 7, பொள்ளாச்சி - 10, மாக்கினாம்பட்டி - 11, ஆனைமலை - 10, ஆழியார் - 13.80, சின்கோனா - 43, சின்னக்கல்லார் - 61, வால்பாறை - 39, சோலையார் - 40 மி.மீ., மழை பதிவானது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us