/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; மக்கள் அவதி கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; மக்கள் அவதி
கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; மக்கள் அவதி
கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; மக்கள் அவதி
கழிவுநீரால் சுகாதாரம் பாதிப்பு; மக்கள் அவதி
ADDED : ஜூன் 10, 2025 09:34 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பாரதி வீதியில் பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர், கொசு உற்பத்தி மையமாக மாறி, தொற்று நோய்களை பரப்புமிடமாக உள்ளது. இதற்குரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பாரதி வீதியில், வணிக வளாகங்கள், தனியார் பள்ளியும் உள்ளது. தினமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த ரோட்டில் கழிவுநீர் குட்டை போல தேங்கி நிற்பதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
பாரதி வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்ல போதிய வசதியில்லாத சூழலில், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்தும் கழிவுநீரும், ரோட்டிலேயே தேங்கி நிற்கிறது.
அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி மையமாக மாறியுள்ளது. கடைகளுக்கு வருவோர், அங்குள்ள பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர் துர்நாற்றத்தால் சிரமப்படுகின்றனர். மேலும், கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகுவதால், தொற்றுநோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.
இங்கு, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், கால்வாய் அமைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் முழுமை பெறாமல் உள்ளது. இதற்கு தீர்வு காணப்படாமல் உள்ளதால் மிகுந்த சிரமமாக உள்ளது. அதிகாரிகள் மனது வைத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.